அரூர் பகுதியில் மக்காச்சோளப்பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும்
பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் பயிற்சி அனைத்து உதவி வேளாண் அலுவலர்கள் மற்றும் அரூர் பகுதி அனைத்து வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வேளாண் இணை இயக்கநர் திருமதி வசந்தரேகா அவர்களின் உத்தரவுப்படி அரூர் உதவி இயக்குநர் சா. போகன் சகாயராஜ் அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது .
பயிற்சியின் போது மக்காச்சோளப்பயிரில் ஒருங்கிணைந்த அமெரிக்கன் படைப்புழு கட்டுப்படுத்துதல் குறித்து விரிவான பயிர்ச்சி அளிக்கப்பட்டது.
மக்காச்சோளப் பயிரில் படைப்புழு ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் :
- பயிர் சுழற்சி முறை தொடர்ந்து மக்காச்சோளம் பயிரிடுவதை தவிர்த்து, சோளம் மற்றும் கம்பு விதைத்தல்.
- கோடை உழவு - கடைசி உழவில் வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ இடுதல்.
- ஒரே சமயத்தில் விதைப்பு - ஒரு பகுதி விவசாயிகள் ஒரே சமயத்தில் விதைத்தல்.
- விதை நேர்த்தி - சையன்ட்ரானிலிப்ரோல் + தயோமிதாக்ஸம் 19.8 Fs - 4 மி.லி/கிலோ.
- பயிர் இடைவெளி - மானாவாரி 45x20 செ.மீ பாசன பகுதி 60x25 செ.மீ. 10 வரிசை கொண்ட ஒவ்வொரு பாத்திக்கும் இடைவெளி 2-2.5 அடி.
- வரப்பு பயிர் - நேப்பியர் புல், சூரியகாந்தி, எள், சாமந்தி, தட்டைப் பயிறு மற்றும் துவரை மானாவாரி மற்றும் இறவை பகுதி 3 வரிசைகள்.
- ஊடு பயிர் - உளுந்து, பாசிபயிறு.
- இனக்கவர்ச்சி பொறி - ஏக்கருக்கு 5 வைத்து ஆண் தாய் புழுச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்தல்.
- பாதிப்பு அதிகமாகும்போது
- பயிர் ஆரம்ப நிலை (15-20 நாட்கள் விதைத்த பின்னர்) - குளோரான்ரானிலிப்ரோல் 18.5 SC 0.4 மிலி/ 1 லிட்டர் ப்ளுபென்டிமைட் 48 SC 0.5 மிலி/1 லிட்டர் அசாடிராக்டின் (1500 PPM) 5 மிலி/1 லிட்டர் ஏதேனும் ஒன்றினை தெளித்தல்.
- பயிர் பிந்திய நிலை (40-45 நாட்கள் விதைத்த பின்னர்) - எமாமெக்டின் பென்சோயேட் 5 SG 0.4 மிலி/ 1 லிட்டர் ஸ்பைனிடோரம் 117 SC 0.5 மிலி/ லிட்டர் ) நோவாலூரான் 10 EC 1 மிலி/ 1 லிட்டர் மெட்டாரைசியம் பூஞ்சன கலவை 8 கிராம் 1லிட்டர் ஏதேனும் ஒன்றினை தெளித்தல்
மேற்கண்ட மக்காச்சோளப்பயிர் சாகுபடி தொழிற்நுட்பங்களைப் கடைப்பிடித்து அதிக மகசூல் பெற பயிற்சியின்போது வழியுறுத்தப்பட்டது.
Tags:
அரூர்