தனியார் விளையாட்டு நிறுவனம் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது.

ADONAI SPORTS ACADEMY சார்பாக MERCY HOME யில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற முதியவர்கள் மனவளர்ச்சி குன்றிய தொழில் பயிற்சி மாணவர்கள் என மொத்தம் 200 நபர்களுக்கு  மதிய உணவு வழங்கப்பட்டது.

திரு ஜேம்ஸ் வசந்த் மற்றும் திருமதி செல்வீனா ஜோம்ஸ் அவர்கள் சார்பாக திமுக தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு A S சண்முகம் அவர்கள் முன்னிலையில் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்வில் பேசிய திரு AS. சண்முகம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டோர், மாற்றுதிறனாளிகள் ஊனமுற்றோர் போன்றோர்களை என்றும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை தங்களால் முடிந்த வரை அனைவரும் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் M செந்தில் உடற்கல்வி ஆசிரியர் நல்லம்பள்ளி, மற்றும் V சிங்காரவேலன் உடன் இருந்தனர்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form