ரூ.500 கோடி பால் பணம் பாக்கியை உடனடியாக வழங்கவேண்டும் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

ரூ.500 கோடி பால் பணம் பாக்கியை உடனடியாக வழங்கவேண்டும் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ 500 கோடி ரூபாய் பணம் பாக்கி உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பசும் பாலுக்கு விலை நாற்பத்தி இரண்டு ரூபாயும் எருமை பால்  விலை 52 ரூபாய்  ஏற்ற வேண்டும் என வலியுறுத்தியும் ஆவின் பாலை பள்ளிகளில் சத்துணவு சேர்த்து வழங்க வேண்டும் ஆவின் நிர்வாகத்தில் ஏற்பட்ட முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் அனைத்து பகுதிகளிலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்ய வேண்டும்.

பால் பண பாக்கி  500 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் பெண்ணாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னசாமி தலைமை வகித்தார் இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் கே அன்பு, பாப்பாரப்பட்டி பகுதி குழு செயலாளர் ஆர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர் இதில் ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form