நேரு யுவகேந்திரா சார்பில்ல 75-வது சுதந்திர தின ஓட்டம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

வலிமையான இந்தியா 75-வது சுதந்திர தின ஓட்டம்2.0 அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி தலைமை தாங்கி  தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட நேரு யுவகேந்திரா மாவட்ட நிர்வாகி பிரேம்பாரத்குமார் வரவேற்றார்.

அதியமான் கோட்டத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வலிமையான இந்தியா சுதந்திர தின ஓட்டம் 2.0 கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சுதந்திர தீன ஓட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பியூலா ஜேன்சுசிலா, ஆல் இந்தியா ரேடியோவின் தலைமை திட்ட அலுவலர் முரளி, பெரியார் கல்லூரி என்எஸ்எஸ் திட்ட அலுவலர் விஜயன், தருமபுரி அரசு கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன், தருமபுரி அரசு கலைக் கல்லூரி என்எஸ்எஸ் அலுவலர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். நேரு யுவகேந்திரா கணக்கு திட்ட அதிகாரி வேல்முருகன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தருமபுரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் செய்யப்பட்டிருந்தது.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form