நீண்ட இடைவெளிக்குப் பின் பள்ளிகள் திறக்கபட்ட நிலையில் மாணவர்கள் உற்சாகம்.

நீண்ட இடைவெளிக்குப் பின் பள்ளிகள் திறக்கபட்ட நிலையில் மாணவர்கள் உற்சாகம்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவியதன் காரணமாக  பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஒரு மாதமாக கொரோனா தொற்று குறைந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் இன்று(செப்.,1) திறக்கப்பட்டன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும், முதல்கட்டமாக நேரடி வகுப்புகள் துவங்கின.

அதேபோல், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு, மாணவர்கள் உற்சாகமாக வந்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பள்ளி மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். 

அவர்களை வரவேற்க்கும் விதமாக சூளகிரி இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் சூளகிரி கிளை மேலாளர்.ராமாகிருஷ்ணன் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு முககவசம் கொடுத்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சூளகிரி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி மற்றும் வார்டு உறுப்பினர் அப்சர் ஆகியோர் கலந்துகொண்டனர்

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form