சத்தியம் தொலைக்காட்சி தாக்குதல் கண்டித்து பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

தனியார் தொலைக்காட்சி தாக்குதல் கண்டித்து அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை தனியார் தொலைக்காட்சி சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி  மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்க தேசிய தலைவர் டாக்டர். கவியரசு கலந்துகொண்டு தலைமை தாங்கினார். 

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்க மாநில, மாவட்ட, ஒன்றிய,நிர்வாகிகளும் அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களும் கலந்து கொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு பத்திரிகையாளர்க்ளுக்கு நலவாரியம் அமைத்திட வேண்டும் எனவும் , பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு தனி சட்டம் அமைத்திடவும் வலியுறுத்தினர். 

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form