கோயில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களுக்கு வேலை வாய்ப்பு; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தருமபுரி மாவட்ட கோயில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களுக்கு வேலை வாய்ப்பு - தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தகவல் இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது :-

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 17 கோயில்களில் கோயில் பாதுகாப்பு பணியிடம் காலியாக உள்ளதால் அப்பணியிடத்தில் முன்னாள் படைவீரர்களை சிறப்பு காவலராக பணியமர்த்தப்பட உள்ளது. எனவே விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் கோவில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கான குறைந்த பட்ச ஊதியம் ரூ.8000/- ஆக மாத ஊதியம் வழங்கப்படும். மேலும் 62 வயது வரை பணிபுரியலாம். 61 வயதிற்குள் உள்ள முன்னாள் படைவீரர்களும் கோவில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்.

எனவே தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் H-49, காளியப்பா நிவாஸ், பழைய கோட்ரஸ், ஒட்டப்பட்டியில் இயங்கி வரும் தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரில் அணுகி விருப்பத்தினை கடிதம் மூலம் தெரிவிக்குமாறும், மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண் 04342-297844யை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form