ஒகேனக்கல்லிற்கு தமிழக முதல்வர் வருகையை ஒட்டி முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ஒகேனக்கல்லில் தமிழக முதல்வர் வரவை ஒட்டி முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதிக்கு வருகை தர உள்ளதால் அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார்.

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்தை பார்வையிட உள்ளார். இதற்காக பென்னாகரம் முதல் ஒகேனக்கல் வரை உள்ள ரோடுகளை சரிபார்க்கும் பணி, ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள நடைபாதைகளில் இருபுறங்களிலும் புல்தரை அமைக்கும் பணி, முதல்வர் தங்குமிடம், தமிழ்நாடு கூட்டுக் குடிநீர் வடிகால் வாரியத்தின் பார்வையிட உள்ள பகுதி மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் மருத்துவர் வைத்தியநாதன் கூடுதல் உதவி ஆட்சியர் சித்ரா விஜயன், மாவட்ட காவல்துணை  கண்காணிப்பாளர் புஷ்பராஜ், தமிழ்நாடு கூட்டு குடிநீர் வடிகால் திட்ட நிர்வாக பொறியாளர் சீனிவாசன், உதவிப் பொறியாளர் முருகன், பென்னாகரம் வட்டாட்சியர் பாலமுருகன், பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் சௌந்தரராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form