RTI சட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற பதிவேடுகள் ஆய்வு.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பி. செட்டிஹள்ளி ஊராட்சியில் ஊராட்சியின் 2006 முதல் 2021 வரையிலான அனைத்து பதிவேடுகளையும் பார்வையிட ஆகஸ்ட் 28 அன்று தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 2(j) படி வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

அதன் அடிப்படையில் பதிவேடுகளை பார்வையிட நமது கிராமசபை இயக்கத்தின் மாநிலத் தலைவர் திரு.மா. வினாயகமூர்த்தி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் திரு. மாதப்பன் ஆகிய இருவரும் சென்றனர். உடன் கிளை தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் திரு. திருநாவுக்கரசு  திரு.தமிழ்செல்வன் ஆகியோரும் பங்கேற்றனர்.  ஆவணங்கள் ஊராட்சி செயலாளர் அவர்களால் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பதிவேடுகள் பார்வைக்குப் பிறகு தேவைப்படும் தகவல்களை நகல்களாக வழங்க குறிப்பெடுத்து வழங்கப்பட்டது. 

குறிப்பில் உள்ள தகவல்களை  செப்டம்பர் 6ஆம் தேதி  நகல்களாக வழங்க ஊராட்சி செயலர் உறுதி அளித்துள்ளார். நகல்கள்  கிடைத்தவுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இயக்கத்தின் சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form