வத்தல்மலை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு.

கொரோனா பரவலின் காரணமாக அரசு ஊராடங்கை அறிவித்துள்ள நிலையில் மக்கள் தங்கள் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்க அரசை எதிர்நோக்கி இருக்கின்றனர், அரசும் முடிந்த அளவு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. 

இதேபோல மக்களின் மீது அக்கறை கொண்டு பல சமூக குழுக்களும், நிறுவனங்களும் மக்களுக்கு உதவி வருகின்றனர், தருமபுரி மாவட்ட ஊட்டி என அழைக்கப்படும் வத்தல்மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்திசெய்ய தமிழகத்தின் பிரபல கல்வி ஆலோசனை நிறுவனமான விஜய்ஸ் இன்போ மீடியா மற்றும் விஜயலட்சுமி டிராவல்ஸ் நிறுவனங்கள் இணைந்து இன்று வத்தல்மலை பகுதி மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்குகிறார்கள். 

இந்த நிகழ்வை விஜய்ஸ் இன்போ மீடியா நிறுவனம் முன்னின்று நடத்துகிறது.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form