வறண்டது வாணியறு அணை, உழவர்கள் வேதனை.

செய்தியாளர்: திலீபன்.
பாப்பிரெட்டிப்பட்டி, ஜுன் 17.

 தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே  வாணியாறு அணை வரண்டு போனதால்,  விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சேர்வராயன் மலையில், ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ளது, வாணியாறு அணை. 1979-1985ம் ஆண்டு கட்டப்பட்டு, 86ம் ஆண்டு முதல் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்த அணை, 65 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி தாலூகாவில் உள்ள வெங்கடசமுத்திரம், மோளையானூர், கோழிமேக்கனூர், பாப்பிரெட்டிப்பட்டி, தேவராஜபாளையம், மெணசி, ஆலாபுரம், பூதநத்தம், தென்கரைக்கோட்டை, அலமேலுபுரம், அதிகாரப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட, 17 கிராமங்களில் உள்ள, 10 ஆயிரத்து, 517 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.வாணியாறு அணையில், தண்ணீர் தேங்கினால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்வதோடு, அப்பகுதி செழிப்பாகவும், தற்போது பருவமழை பொய்த்ததால், அணை போதிய அளவில், தண்ணீர் இருப்பு இல்லை. தற்போது வெறும், 16 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்த அணையில் மூலம் விவசாயம் செய்ய காத்துக் கொண்டிருந்த விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில், பாக்கு, மஞ்சள், கரும்பு, நெல் சாகுபடி செய்து வந்தனர். அதிக மழை இல்லாததாலும், அணையில் இருந்து தண்ணீர் வருவது குறைந்து விட்ட காரணத்தினால் நெல், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களின், பயிரிடுவது பரப்பளவு குறைந்து விட்டது. இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி, தரிசு நிலமாக காட்சி அளிக்கிறது.இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, "இந்த ஆண்டு மழை குறைந்துள்ளது. இதனால், ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து வாணியாறு அணைக்கு, தண்ணீர் வரத்து இல்லாமல் போனது. இந்த அணையை நம்பி, விவசாயம் செய்ய காத்துக் கொண்டிருந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கால்நடைகளுக்கு கூட தீவனத் தடுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது, வாணியாறு அணை ஆடு, மாடு மேயும் மேய்ச்சல் தரையாக மாறி வருகிறது,' என்றனர்.
News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post
Mini Popup Ad

A new post is available! Click here to read.

Your Logo

Subscribe to Our Notifications

Stay updated with our latest content and updates.