தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள சாமிசெட்டிப்பட்டி, மானியதஅள்ளி, பரிகம், கம்மம்பட்டி, தொப்பையாறு அணைடேம் ஆகிய கிராமப்புறங்களில் உள்ள மலைசார்ந்த பகுதிகள் மற்றும் கரடு புறம்போக்கு ஆகிய இடங்களில், வெளிமாநிலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலானோர் இந்த சூதாட்டத்தில் கலந்து கொண்டு பல லட்சங்களை நாள்தோறும் இழந்து வருகின்றனர். பெரும்பாலும் இவ்வாறு நடைபெறும் சூதாட்டம் குடியிருப்பு கிராமங்களை ஒட்டி இருக்கும் கறடு புறம்போக்கு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து, சூதாட்டங்களுக்கு பைனான்ஸ் விடும் கும்பல் இதனை நடத்தி வருகின்றனர். சூதாட்டத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் குடிபோதையில் வந்து செல்வதால் அவ்வப்போது பிரச்சனை ஏற்படுவதால், கிராமப்புற பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகள் அச்சநிலையிலேயே இருந்து வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்ககோரி சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும் தர்மபுரி எஸ்பிக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய, எஸ்பி சிஐடி போலீசாரும் சூதாட்டம் குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்காமல், காவல் நிலைய போலீசாருடன் கைகோர்த்துக் கொண்டு தகவல் தெரிவிக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. கிராமப்புறங்களை குறிவைத்து இரவு-பகலாக நடக்கும் சூதாட்டத்தால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதை தடுப்பதுடன், கிராமப்புற பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், துணைபோன காவல்நிலைய போலீசார் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எஸ்பி-க்கு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுப்பாரா தர்மபுரி மாவட்ட புதிய எஸ்பி
Tags:
தொப்பூர்