35 பேருக்கு கொரோனா நிவாரண உதவி; பாமக எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன் வழங்கினார்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பங்குநத்தம் ஊராட்சி இராஜகொல்லஅள்ளியில் சோமனஅள்ளி, பங்குநத்தம், பண்டஅள்ளி ஊராட்சிகளில் பணிபுரியும் 35 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணை, காய்கறி அடங்கிய கொரோனா நிவாரண தொகுப்பை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன் வழங்கினார்.


அப்போது அவர் பேசியதாவது:


தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் பாதுகாப்பாக பணியாற்ற வேண்டும். முக கவசம், கையுறைகளை அணிந்து கொண்டு பணியாற்ற வேண்டும். கிராமங்களை சுத்தமாக நோய்தொற்று பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக இராஜகொல்லஅள்ளி கிராமத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்க கொடிகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன் ஏற்றினார்.


இந்த நிகழ்ச்சில் தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் சரஸ்வதி முருகசாமி, நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, பாமக மாநில இளைஞரணி செயலாளர் முருகசாமி, பாமக மாவட்ட செயலாளர் பெரியசாமி ஒன்றிய செயலாளர்கள் சக்தி, சிலம்பரசன், மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form