வணிகர்களின் நலன் கருதி வணிகர் நல வாரியம் மூலம் பல்வேறு சலுகைகள்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கினங்க வணிகர்களின் நலன் கருதி வணிகர் நல வாரியம் மூலம் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதன் அடிப்படையில் ஆண்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 40,00,000/-க்கு குறைவாக உள்ள வணிகர்களுக்கு கீழ்க்கண்ட பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்க்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் 15.07.2021 முதல் 14.10.2021 முடிய உள்ள காலத்திற்குள் இலவசமாக சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பயன்கள்:
  1. உறுப்பினர் இறக்கும் நேர்வில் குடும்பத்தாருக்கு ரூ.1,00,000/
  2. மாற்று அறுவை சிகிச்சை / சிறுநீரக மாற்று புற்றுநோய்கான அறுவை சிகிச்சை ரூ.50,000/
  3. பெண் உறுப்பினரின் கர்ப்பப்பை நீக்க சிகிச்சைக்கு ரூ.20,000/
  4. பங்க் கடை/மூன்று சக்கர வாகனம் வாங்க ரூ.10,000/
  5. கீமோதெரபி, ரேடியோதெரபி, ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சைகளுக்கு ரூ.15,000/
  6. ஆண்டு தோறும் உறுப்பினரின் குழந்தைகளுக்கு ரூ.5,000/- முதல் ரூ.10,000/- வரை கல்வி நிதி.
  7. கடைக்கு தீ விபத்து பேரிடர் இழப்பு ரூ.5,000/
  8. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் உறுப்பினரின் குழந்தைகளுக்கு ரூ.3,000/- முதல் ரூ.25,000/- வரை ஊக்கத்தொகை
  9. 10/12 ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் உறுப்பினரின் குழந்தைகளுக்கு ரூ.5,000/ ரூ.3,000/- ரூ.2,000/- ஊக்கத்தொகை
யாரெல்லாம் உறுப்பினர் ஆகலாம்?

  1. ஆண்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.40,00,000/-க்கு குறைவாக உள்ள எந்த ஒரு வணிக நிறுவனத்தின் உரிமையாளர் / பங்குதாரர். 
  2. உறுப்பினர் ஆவதற்கு GST பதிவெண் அவசியமில்லை, வணிக உரிமம் (Trade license) இருந்தால் போதுமானது விண்ணப்பிக்கும் முறை https://www.tn.gov.in/tntwb/ என்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
மேலும், இணையவழி அல்லாமல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்தும் கீழ்க்கண்ட உதவி மையங்களில் சமர்ப்பிக்கலாம்.. முழு விபரங்களுக்கு : https://www.tn.gov.in/tntwb/ உதவி மையம் சேலம் கோட்ட இணை ஆணையர்(வணிக வரிகள்) அவர்களால் கிழக்கண்ட உதவி மையங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

தருமபுரி மாவட்டம்:
  1. துணை ஆணையர்(மாவ) அலுவலகம், தருமபுரி (04342 230112)
  2. தருமபுரி உதவி மையம் ( செல் நம்பர்: 87789 55535)
  3. பாலக்கோடு உதவி மையம் (செல் நம்பர்: 94424 78977) 
  4. அரூர் உதவி மையம் (செல் நம்பர்: 93601 34300)
கிருஷ்ணகிரி மாவட்டம்:
  1. கிருஷ்ணகிரி 1 உதவிமையம் (செல் நம்பர் 95789 04464)
  2. கிருஷ்ணகிரி 2 உதவிமையம் (செல் நம்பர் 96887 69226)
  3. ஒசூர் வடக்கு 1 உதவிமையம் (செல் நம்பர் 99425 88328)
  4. ஒசூர் வடக்கு 2 உதவிமையம் (செல் நம்பர் 99524 42352)
  5. ஒசூர் தெற்கு 1 உதவிமையம் (செல் நம்பர் 94454 18782)
  6. ஒசூர் தெற்கு 2 உதவிமையம் (செல் நம்பர் 99949 86356)
  7. ஒசூர் தெற்கு 3 உதவிமையம் (செல் நம்பர் 97902 35075)
மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்துள்ள சலுகைகளை, வணிகர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form