விறகு சேகரிக்க சென்றவர், யானை மிதித்து சாவு.


பாலக்கோடு அருகே உள்ள கரிகுட்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (68). நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றவர், வீடு திரும்பவில்லை.


இந்த நிலையில் இன்று காலை காட்டு பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றவர்கள் முனுசாமி உடல் நசுங்கி இறந்து கிடப்பதை கண்டு பாலக்கோடு வனத்துறையினருக்கும் மாரண்டஅள்ளி காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.


தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் முனுசாமியை காட்டு யானை மிதித்து கொன்றதை உறுதி செய்ததை அடுத்து உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form