அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி.

கடத்தூர் அருகே உள்ள கேத்துரெட்டிப்பட்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 33). டிரைவர். சம்பவத்தன்று இவர் வீட்டுக்கு அருகில் சாலையோரம் நடந்த சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form