தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.02 கோடி மதிப்பிலான புதிய கட்டிட கட்டுமானப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 10 ஊராட்சிகள் பிரித்து புதியதாக ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்பட்டது. கோடிஅள்ளி, அஜ்ஜன அள்ளி, சுஞ்சல்நத்தம், இராமகொண்டஅள்ளி, மஞ்சாரஅள்ளி, பத்ரஅள்ளி, கொண்டையனஅள்ளி, பெரும்பாலை, நாகமரை, தொண்ணகுட்டஅள்ளி உட்பட 10 ஊராட்சிகளை கொண்டதாக ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்பட்டது. ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவல் பணிகள் தற்காலிக இடத்தில் இயங்கி வந்த நிலையில் ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.02 கோடி மதிப்பிலான புதிய கட்டிட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது கூடுதல் ஆட்சியர் /மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வைத்தியநாதன்,இ.ஆ.ப., ஏரியூர் ஒன்றியக்குழுத்தலைவர் பழனிசாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சி.வி.மாது, ஒன்றியக்குழு துணைத்தலைவர் தனபால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் சம்பத், உதவி பொறியாளர் துரைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:
பென்னாகரம்