வரும் 27ஆம் தேதி இணையவழி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்; ஆட்சியர் அறிவிப்பு.

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27.08.2021-ம் தேதியன்று காலை 11.00 மணியளவில் காணொளி காட்சி மூலம் நடைபெறவுள்ளது, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27.08.2021 வெள்ளிகிழமை காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் காணொளி காட்சி (Google Meet App) மூலம் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காணொளி காட்சி (Google Meet App) மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form