அரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன், ரூ.1.25 லட்சம் திருட்டு: போலீசார் விசாரணை.
தருமபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட கோவிந்தசாமி நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மணி இவர் அரூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு வாலாஜாபேட்டையில் உள்ள குல தெய்வ கோயிலுக்கு வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்று உள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு11 மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் வெளி கேட், வெளி கதவு, உள் கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில இருந்துள்ளது.வீட்டில் நுழைந்து பார்த்த போது பீரோ, கப்போர்டுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கீழே சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மணி.
கப்போர்டில் வைத்திருந்த 3 சவரன் தங்க சங்கிலி, சிறு சிறு தங்க நகைகள் என மொத்தம் சுமார் 6 சவரன் தங்க நகைகள்,ரூ.1.25 லட்சம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அரூர் போலீஸ் ஸ்டேஷனில் மணி கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டில் சோதனை செய்து. அருகில் உள்ள வீடுகளில் விசாரணை நடத்தி, தெருக்களில் உள்ள சிசிடி கேமராக்களில், இரவு நேரத்தில் நடமாடியவர்களின் விவரம் சேகரித்து, கைரேகை நிபுணர்களை வர வழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags
அரூர்

