ஏரிக்கு நீர் கொண்டுவரும் பாதை மற்றும் கால்வாய் கட்டமைப்பு பணியை பார்வையிட்டார் சட்டமன்ற உறுப்பினர்.

பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கோ.க. மணி அவர்கள் இன்று புலிக்கரை பகுதியில் உள்ள புலிக்கரை ஏரிக்கு நீர் கொண்டுவரும்  பாதை மற்றும் கால்வாய் கட்டமைப்பு பணியை பார்வையிட்டார்.

மேலும் புலிக்கரை ஏரிக்கு நீர் கொண்டுவர நிலம் கையகப்படுத்தி ரூபாய் 65 கோடி மதிப்பில் டெண்டர் ஏலம் விடப்பட்டது, MLA  G.Kமணி அவர்கள் இந்த கால்வாய் கட்டுமான பனியின் ஒப்பந்தம் எடுத்தவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விரைவில் முடித்துக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வில் இவருடன் பாமக மாநில துணைத் தலைவர் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, பாமக மாநில செயலாளர் பெரியசாமி, பாமக ஒன்றிய குழு துணைத்தலைவர் பாடி சேட்டு, பாமக ஒன்றிய செயலாளர் சசிகுமார், புலிக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் குமார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: பாலக்கோடு செய்தியாளர் சிங்காரவேலன்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form