ஆண் கன்று, பெண் கன்று என இரட்டைக் கன்று ஈன்ற பசுமாடு.

அரூரில் இரட்டைக் கன்று ஈன்ற  பசுமாடு.

தர்மபுரி மாவட்டம், அரூர் நகரில் பியூன் கோட்ரஸ் அருகில் வசித்து வரும் கந்தசாமி மனைவி மணி தம்பதியினர் 35 வருடங்களாக பசுமாடுகளை வளர்த்து பால் விற்பனை செய்து பிழைப்பை நடத்தி  வருகின்றனர். 

தற்பொழுது இவர்களிடம் ஆறு பசுமாடுகள் உள்ளது. நேற்று இரவு இவர்களது பசு மாடு ஒன்று கன்று குட்டி ஈன்றது.அதை பார்த்து விட்டு வீட்டில்  உறங்கினர். காலை எழுந்து மாட்டை பார்த்தபோது மேலும் ஒரு கன்றுக்குட்டி இருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். 

ஒரே பிரஸசவத்தில் ஆண் கன்றும்,  பெண் கன்று என இரண்டு கன்றுக்குட்டியை  ஈன்றதால்  அப்பகுதியில்  பலர் அதிசயமாக பசு மாட்டையும்,  கன்றுக்குட்டிகளை பார்வையிட்டு  வருகின்றனர்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form