பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பணிமனையை சேர்ந்த பாமக, தேமுதிக, அண்ணா தொழிற்சங்கங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 50 பேர் இன்று மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பணிமனையை சேர்ந்த பாட்டாளி தொழிற்சங்க சிறப்பு தலைவர் மயில்சாமி, துணைதலைவர் தீர்த்தகிரி ஆகியோர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட பாமக, தேமுதிக, மற்றும் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தோர் இன்று அக்கட்சிகளிலிருந்து விலகி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இன்பசேகரன் முன்னிலையில் தங்களை திமுக தொழிற்சங்கமான தொமுசவில் இணைத்து கொண்டனர்.

புதியதாக  கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று அவர்களுக்கு சால்வை அணிவித்து  இன்று முதல் கட்சிபணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார். நிகழ்சியில் பென்னாகரம் கிளை தொமுச தலைவர் ராஜேந்திரன். செயலாளர் வெற்றிவேல் பொருளாளர் கிருஷ்ணமூர்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form