சாலையில் ஆறாக ஓடும் கழிவு நீர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, உத்தனப்பள்ளி சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாமனப்பள்ளி கிராமத்தில் தமிழக முதல்வர் மருத்துவ திட்டத்தை துவக்கி வைக்க வருகை புரிந்தார், அப்போது சூளகிரி உத்தனப்பள்ளி சாலையில் சாலையோரம் சென்ற கழிவு நீர் கால்வாயை சூளகிரி ஊராட்சி நிர்வாகத்தால் கழிவுநீர் கால்வாயை மண் கொட்டி மூடப்பட்டது.

தற்போது கழிவுநீர் அதிகமாகி சாலையிலே ஆறாக ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர். சாலையில் செல்லும் கழிவுநீரை மேலும் கால்வாய் அமைத்து சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form