மின்வாரிய ஊழியர்களின் சங்க கொடியேற்றி மற்றும் பெயர் பலகை திறப்பு விழா.

அரூரில் மின்வாரிய ஊழியர்களின் சங்க கொடியேற்றி மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் அரூர் மின்வாரிய டாக்டர் அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியன் தொடக்க விழா மாவட்ட திட்ட துணைதலைவர் பொ.சிவன் தலைமையில் நடைபெற்றது மின்வாரிய தொழிலார்களின் சங்கம் சார்பில் அரூர் கோட்டத்தில்  தமிழ்நாடு மின்வாரிய டாக்டர் அம்பேத்கர் எம்ளாயிஸ் யூனியன் சங்க கொடி மற்றும் பெயர் பலகையை மாநில பொதுச்செயலாளர் கேஜி சாமி  திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் விசிக அரசு ஊழியர் அய்க்கிய பேரவை மாநில செயலாளர் ப.மாதையன், மாவட்ட செயலாளர் கி.ஜானகிராமன், ஒன்றிய செயலாளர் எம்.எஸ். மூவேந்தன், கோட்ட தலைவர் ந.மதியழகன், கோட்ட செயலாளர் ஆர்.லட்சுமி, கார்த்தி, ஏ.கார்த்தி, மாநில தலைமை நிலைய செயலாளர் பழனிவேல், மண்டல தலைவர் பெலிக்ஸ், செயலாளர் ராயப்பன், திட்டதலைவர் எல்.சரவணன், திட்ட செயலாளர் கே.மாதேசன், திட்ட பொருளாளர் ஜி.ரமேஷ், விசிக ஒன்றிய துணை செயலாளர் தீரன்(எ)தீர்த்தகிரி, நகர பொறுப்பாளர் சித்தார்த்தன், ஒன்றியகுழு உறுப்பினர்கள் ரகுநாத், முருகன்  உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் இறுதியில் கோட்ட பொருளாளர் கே.முருகன் நன்றி கூறினார்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form