கொள்ளையர்களின் குறியாகி போன அரூர் பகுதி கோவில்கள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

அரூர் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் திருட்டு: போலீசார் விசாரணை.

தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றியம், பெரியபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மந்திகுளாம்பட்டி கிராமத்தில் இருளர் இனத்திற்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ வீரபத்திரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சில தினங்களுக்கு முன்பு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து சாமிக்கு நேர்த்தி கடன் செலுத்தியநிகழ்ச்சி நடைபெற்றது. 

இன்று 27ம் தேதி காலை வீரபத்திரன் கோவில் கதவு உடைந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் பூசாரி கிராம மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது ஒரு பவுன் நகை, 250 கிராம் வெள்ளி, இரண்டு உண்டியல் காணாமல் போனது தெரிந்தது.  கோட்டப்பட்டி போலீசில் கிராம மக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் வரவழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அரூர் பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுவருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form