Trending

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மாற்று பாதையில் இரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.


சேலம் ஓமலூர் ரயில் நிலைய தண்டவாள பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது இதையொட்டி தர்மபுரி ஓசூர் வழியாக பெங்களூர் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்,  பெங்களூர்- எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில் (வண்டி எண் 02677) பெங்களூர் ரயில் நிலையத்திலிருந்து வரும் 31-ம் தேதி காலை 6:10 மணிக்கு புறப்படும்.

இந்த இரயில் ஓசூர், தர்மபுரி, ஓமலூர் வழியாக செல்லாமல் மாற்று பாதையில் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட், குப்பம் வழியாக சேலம் வந்தடையும், இதேபோல் கோவை- லோக்மான்யதிலக் (வண்டி எண் 01014) தினசரி ரயில் வரும் 31-ஆம் தேதி முதல் கோவை ரயில் நிலையத்தில் இருந்து காலை 8 .55 மணிக்கு புறப்பட்டு சேலம், திருப்பத்தூர், குப்பம், பங்காருபேட், கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூர் ரயில் நிலையம் சென்றடையும், இதேபோல் எர்ணாகுளம்- பெங்களூர் இன்டர்சிட்டி  சிறப்பு ரயில் (வண்டி எண் 02678) வரும் 31ம் தேதி முதல் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு சேலம் திருப்பத்தூர் குப்பம் பங்காருபேட்டை கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூர் ரயில் நிலையம் சென்றடையும்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form