தேசிய அளவில் அபாகஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு விழா.

தருமபுரி வெண்ணாம்பட்டியில் இயங்கிவரும் லக்ஷ்ன் அபாகஸ் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் லக்ஷன் கல்வி நிறுவன முதல்வர் திருமதி. நந்தினி அழகர் அவர்கள் வரவேற்று பேசினார், பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் செயலாளரும், சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் மாவட்ட தலைவருமான திரு. லஷ்மிபதி அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை லக்ஷன் கல்வி நிறுவனத்தினர் செய்திருந்தனர், இந்த நிகழ்வில்  ஏராளமான மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form