ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியர்களுக்கு குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோவின்) மூலமாக குறுகிய கால (ஒன்று முதல் ஆறு மாதம் வரையிலான) திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கட்டணமில்லாமல் அளிக்கப்பட உள்ளது.

தருமபுரி மாவட்டத்தை சார்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தகவல் 

ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் இதுகுறித்து மாவட்ட தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோவின்) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியர்களுக்கு குறுகிய கால (ஒன்று முதல் ஆறு மாதம் வரையிலான) திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது.

மாணாக்கர்களின் தகுதிக்கேற்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல மாணவ / மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் தொழில் நுட்ப பயிற்சியினை மேற்கொள்ள தாட்கோவின் www.training.tahdco.com என்ற இணையதளத்தின் வழியே பதிவேற்றம் செய்து தாங்கள் விரும்பும் பயிற்சியினை கொண்டு இத்திட்டத்தின் மூலம் கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் மாணவ / மாணவியர்களுக்கு போக்குவரத்து படிகள் வழங்கப்படும். இப்பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு SCVT / SSC சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.

திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து சான்று பெற்ற பயிற்சியாளர்கள் மாவட்ட மேலாளரிடம் தாங்கள் பயின்ற பயிற்சிக்கு தொடர்பான தொழில் தொடங்கிட, http://.application.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்து தொழில் முனைவோர் திட்டம் (EDP) மற்றும் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு (SEPY) திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். 

அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க ஆவண செய்யப்படும். ஆதிதிராவிடர் / பழங்குடியினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆட்சித் தலைவர் தலைவர் திருமதிச.திவ்யதர்சினி., இ.ஆ.ப., அவர்கள் இவ்வாறு மாவட்ட தெரிவித்துள்ளார்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form