ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கண் தானம்.

அரூர் திரு.வி.க நகரில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் கண்களை அவரது குடும்பத்தினர் கண் தானம் செய்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பி.மனோகரன் (77). இவர் உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் உயிரிழந்தார். 

தொடந்து, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் கண்களை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர். இதையடுத்து, தீர்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளர் கு.கலையரசன் ஒருங்கிணைப்பில், மருத்துவ குழுவினர் மனோகரனின் கண்களை தானமாக பெற்றனர். தற்போது, 36 ஆவது தேசிய கண்தான இருவார விழா கடைபிடிக்கும் இந்த நேரத்தில் தானமாக பெறப்பட்ட கண்களை பார்வையற்ற இருவருக்கு நல்லமுறையில் பொருத்தப்பட்டதாக தருமபுரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தினர் தெரிவித்தனர். 

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form