வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய ஆண் சடலம்: போலீசார் விசாரணை.

அரூர் அருகே வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய ஆண் சடலம்: போலீசார் விசாரணை.

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே கோட்டப்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட பையர்நாயக்கன்பட்டி பகுதியில் வன பாதுகாவலராக பணியாற்றுபவர் மகேந்திரன் இவர் நேற்று கத்திரிபட்டி காப்புக் காட்டில் ஊழியருடன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது தடுப்பணை அருகே மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்குவது போல் தெரிந்தது. அருகில் சென்று பார்த்தபோது ஆண் சடலம் என தெரியவந்தது. 

மகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி விசாரித்ததில், வனப்பகுதியை ஒட்டியுள்ள ஜானகியம்மாள் என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வந்தவர் என்பதும் இவர் கோட்டப்பட்டி அருகே மாலக்கல் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் கோபால்(30)  இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகளும் தீபா என்ற மனைவி உள்ளது தெரியவந்தது. பிரேதத்தை அரூர் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோபால் தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணையில் நடத்தி  வருகின்றனர். 

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form