காவல் நிலைய வளாகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் தொப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சர்மிளா பானு அவர்கள் தலைமையில் காவல் நிலைய வளாகத்தில்  பஞ்சாயத்து தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிலைகளை கரைப்பது ஊர்வலம் எடுத்துச் செல்வது தொடர்பாக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் கொரோனா தொற்று பரவி வரும் இச்சூழலில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியும் அதிக கூட்டங்களை கூட்டாமல் இருக்கவும் அறிவுறுத்தினார். 

வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதால் தொப்பூர் பகுதியிலிருக்கும் தொப்பையாறு அணையில் விநாயகர் சிலைகளை கரைப்பது வழக்கம், இங்கு சிலை கரைப்பதற்கு சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மற்ற சிலைகளும் வருவது இங்கு வழக்கம், கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நிபந்தனைகள் தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form