இண்டர்நேஷனல் லா பவுண்டேசன் சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி.

தருமபுரியில் இண்டர்நேஷனல் லா பவுண்டேசன் சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி

தருமபுரியில் இண்டர்நேசனல் லா பவுண்டேசன் அமைப்பின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக நிகழ்வு நடந்தது. தருமபுரி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த இந்நிகழ்வுக்கு அமைப்பின் நிறுவனத்தலைவர் பா.அறிவொளி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பொறியாளர் ந.பிறைசூடன் வரவேற்புரையாற்றினார்.

மாநில ஒருங்கிணைப்பார் ஆர்.சீனிவாசன், மாநில செய்தி தொடர்பாளர் பொறியாளர் ஜி. முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய நிர்வாகிகளை மாநில அமைப்புச் செயலாளர் பத்திரிகையாளர் பொம்மிடி முருகேசன் அறிமுகம் செய்து வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக  தகடூர் புத்தகப் பேரவை தலைவர் இரா.சிசுபாலன், தலைமையாசிரியர் கூத்தப்பாடி மா.பழனி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர். என்.மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் நற்சுவை ஆர்.சுகுமார், மாவட்ட பொருளாளர் எம்.பிரதீப்குமார், மாவட்ட சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் எம்.சுரேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேக்ஹக்கானி, மாவட்ட துணைத்தலைவர் ஆர்.அறிவழகன், மாவட்ட துணை செயலாளர் வெற்றிஆறுமுகம் இந்தியன் பில்லர்ஸ் வினோத்குமார், கிரீன் தகடூர் கண்ணன், மற்றும் கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களின் நிர்வாகிகள், கர்நாடக மாநில நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர் இறுதியில் தகடூர் மு.சந்துரு நன்றி கூறினார்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form