மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் கன்னியாகுமரி - டெல்லி ராஜ்காட் பயண வழியனுப்பு விழா.

இந்தியா சுதந்திரமடைந்து 75-வது ஆண்டை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி ராஜ்காட் வரை சுமார் 2800 km சைக்கிள் பேரணி மேற்கொள்கின்றனர்.
இந்த சைக்கிள் பேரணி ஒரு நாளைக்கு 100 கிலோ மீட்டர் வீதம் 28 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது அதன்படி ஆறாவது நாள் பயணத்தை நேற்று தருமபுரியில் முடித்து ஓய்வு எடுத்துவிட்டு ஏழாவது நாள் பயணத்தை இன்று(31.08.2021) தொடங்கினர். தருமபுரி மாவட்டத்திற்கு வருகைதந்த சிஆர்பிஎப் வீரர்களின் சைக்கள் பேரணிக்கு தருமபுரி விஜய் வித்தியாலயா பள்ளியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்பேரணி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.சி.கலைச்செல்வன்.இ.கா.ப., அவர்கள் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் தருமபுரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.அண்ணாதுரை, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.செந்தில்குமார் மற்றும் விஜய் வித்யாலயா தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்
சைக்கிள் பேரணியை வரவேற்கும் விதமாக மாணவர்களின் கலைநிகழ்ச்சி மற்றும் தெருகூத்து கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பேரணியினர் வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்று டெல்லி ராஜ்காட் சென்றடைகின்றனர்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form