மத்திய ரிசர்வ் போலீசாருக்கு உற்சாக வரவேற்பு.

நாட்டின் 75 வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதமாக, மத்திய காவல் படையைச் சேர்ந்த 15 வீரர்கள் கன்னியாகுமரி முதல் டெல்லி ராஜ்கோட் வரை "ஆசாதி க அம்ருத் மஹோத்சவ” என்ற தலைப்பில் விழிப்புணர்வு தொடர் சைக்கிள் பயணத்தை துவக்கியுள்ளனர். 

கடந்த, ஆகஸ்ட் 22ஆம் தேதி துவங்கிய இந்த தொடர் சைக்கிள் பயணம் ஒவ்வொரு குழுவாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக 2850 கிலோ மீட்டர் பயணம் செய்து, வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று டெல்லி ராஜ்கோட்டை சென்றடையவுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு கர்நாக எல்லையான கடைசி  கிருஷ்ணகிரி மாவட்டத்திற்க்கு வந்தடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மிக சிறப்பாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் சூளகிரி காவல்துறையினர், விளையாட்டு அகாடமியின் குழுவினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு அளித்தனர்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form