அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி.

செப்டம்பர் 1 இன்று தர்மபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி.
தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த் தொற்றால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் (செப் 1) பல்வேறு கட்டுபாடுகளுடன் தமிழ்நாடு அரசு பள்ளிகளை திறக்க ஆணை பிறப்பித்துள்ளது.அதன்படி இன்று அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் மணிவண்ணன் தலைமையில் மாணவர்கள் முககவசம் அணிந்து பாதுகாப்புடன் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தனர். வகுப்பறையில் 20 மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர்.

பள்ளியில் 50 சதவிகித மாணவர்களை மட்டும் அனுமதித்தனர்.பள்ளிக்கு வரும் மாணவர்களை வெப்பமானி வைத்து பரிசோதனை செய்யப்பட்து. வகுப்பில் சமூக இடைவெளியுடன் மாணவர்களை அமர வைக்கப்பட்டனர். சானிடைசர் கொண்டு கைகளை கழுவ தண்ணீர், சோப்பு ஆகியவை வகுப்பறை முன்பு வைக்கப்பட்டுள்ளது.

அரசு வழிகாட்டுதலை பின்பற்றி மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆசிரியர்கள் கொரோனா பரிசோதனை செய்து தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் தலைமையாசிரியை தலைமையில் மாணவிகளை பாதுகாப்பாக வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form