வங்கி மேலாளரை கண்டித்து மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் முற்றுகை.

காரிமங்கலத்தில் வங்கி மேலாளரை கண்டித்து மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் முற்றுகை.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இயங்கி வரும் கனரா வங்கியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இரண்டு ஆண்டுகளாக  பணம் தராமல் அழைக்கழிக்க விடுவதாகவும், வங்கி மேலாளர் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் இதனால் 150 குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன என கூறி மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் வங்கி முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மேல் உள்ள அதிகாரிகள் பணம் தரும்படி சொல்லியும் வங்கி மேலாளர் தர முடியாது என கூறுகிறார். எனவே  வங்கி மேலாளரை மற்ற வேண்டும் என‌ கோரிக்கை விடுத்தனர்.

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form