அனைத்து வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம்.

கிருஷ்ணகிரி அனைத்து வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் வெங்கடேஸ்வரா காமப்ளக்ஸ் சுபம் ஹாலில்  நடைபெற்றது.

கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர் சங்க தலைவர் எம்.பீ.  சுரேஸ்  தலைமையில் நடைபெற்றது, நகர செயலாளர்   பாலதண்டாயுதம் வரவேற்புரை நிகழ்த்தினார், புதிய நிர்வாகிகளை  கிருஷ்ணகிரி மாவட்ட வணிக சங்க தலைவர் ஏ.டி. கண்ணன் அறிமுகம் செய்து வைத்தார்.

அனைத்து வணிகர் சங்க தலைவர்  எம். பீ. சுரேஷ் அவர்கள் பேசும் போது : வணிகர் நல வாரியத்தில் அனைத்து வணிகர்களும் உரிப்பினாக  சேர்வதற்கு கிளை சங்க நிர்வாகிகள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கிருஷ்ணகிரி சங்கத்தை மாநிலத்திலேயே சிறந்த சங்கமாக கொண்டு வருவதாக கூறினார், கிருஷ்ணகிரி வணிகர்களுககாக எந்த நேரமும் பணியாற்றுவேன் என்று கூறினார். 

MKN ரங்கநாதன்,  JMS சின்னப்பன்,  G தங்கராஜ்,  KRK பாபு,ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள், கிருஷ்ணகிரி நகர கிளை சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர், பொருளாளர் V. சத்யநாராயணன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

விழா ஏற்பாடுகளை K.R. குமரவேல், K.கணேஷ் பாபு, M. ராஜா, L.சுதர்சன்  ஆகியோர் செய்தனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form