மதுவிற்காக தொப்பூர் கனவாய் பகுதியில் 4 பேர் பலி.

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக அங்கு மதுக்கடைகளை அரசு திறக்க அனுமதியளிக்கவில்லை, இதனால் சேலம் மாவட்ட எல்லையோர மக்கள், தருமபுரி நோக்கி படையடுக்க தொடங்கினர்.
சேலம் மாவட்டம் ஐலகண்டாபுரத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் 2 பைக்கில் மது வாங்குவதற்கு தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ள மதுகடையில் மது வாங்கிக்கொண்டு ஜலகண்டாபுரம்  திரும்பிய நிலையில் தொப்பூர் கனவாய் பகுதியில் எதிரே சென்ற லாரியில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி, இத்தகவல் அப்பகுதி மக்களை பயம் கொள்ள வைத்துள்ளது. மது கடைகள் திறந்ததின் விளைவு இன்று 4 உயிர் பறிபோகும் நிலை என அப்பகுதி மக்கள் குமுருக்கின்றனர்.
இரு மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து இதுபோன்ற நிகழ்வுகள் இனி நிகழாமல் தடுக்கவேண்டும்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

1 Comments

Previous Post Next Post

Contact Form