அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி உள்பட பகுதிகளில் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மணி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி கடைகளை திறந்த 379 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் சென்ற 133 பேருக்கு ரூ.48 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர். ஹெல்மெட் அணியாத 379 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ஊரடங்கு விதியை மீறிய 63 பேரின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:
ஊரடங்கு