சேஷம்பட்டியில் 7வது சர்வதேச யோகா தினம்.

இந்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகமான நேரு யுவ கேந்திரா, தருமபுரி மாவட்டம் சார்பில் 7வது சர்வதேச யோகா தினம், இன்று காலை சேஷம்பட்டியில் சமூக இடைவேளியுடன் மாஸ்க் அணிந்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. இதில் தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் கணக்கு மற்றும் நிகழ்ச்சி உதவியாளர் G.வேல்முருகன், தகடூர் ந.பிறைசூடன் மற்றும் யோகா பயிற்றுநர் பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்று யோகா குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி பயிற்சிகள் மேற்கொண்டனர்.

மேலும் நேரு யுவ கேந்திராவின் இளைஞர் நற்பணி மன்றங்கள் மூலம் அண்ணாமலைபட்டி, குட்டூர், பெரிய குப்பூர், பிள்ளப்பட்டி, தின்னப்பட்டி மற்றும் ஆதியோகி யோகா பயிற்சி மையத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form