தொழில் முனைவோர் திட்டம் மூலம் நாட்டு கோழிவளர்ப்பு திட்டம்.
திட்டத்தின் முக்கிய அம்சம்.
1. பயனாளி 1000 எண்ணிக்கையில் பாலினம் பிரிக்கப்படாத இரட்டை பயன் (இறைச்சி/முட்டை) நாட்டு கோழி குஞ்சுகளை, ரூபாய். 30,000/-க்கு கொள்முதல் செய்த பின்னர், பின் முடிவு மானியமாக ரூபாய்.15,000/- பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
2. பயனாளி 1500 கிலோ கோழித் தீவனத்தினை ரூபாய். 45,000/-க்கு கொள்முதல் செய்த பின்னர், பின்முடிவு மானியமாக ரூபாய். 22,500/- பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
3. பயனாளி ரூபாய்.75,000/-க்கு கோழி குஞ்சு பொரிப்பான் கொள்முதல் செய்த பின்னர், பின்முடிவு மணியாக ரூபாய். 37,500/- பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
4. ஒவ்வொரு பயனாளியும் சேவல்களை 16 வாரங்கள் வரையிலும், முட்டைக் கோழிகளை 72 வாரங்கள் வரையிலும் வளர்க்க வேண்டும்.
5. சேவல்கள், கோழி முட்டைகள், கருவுற்ற முட்டைகள், கழிக்கப்பட்ட கோழிகள் மற்றும் கோழிக்கழிவு உரம் முதலியன விற்பனை மூலம் பயனாளிகள் வருமானம் பெரும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பயனாளிகளுக்கான தகுதிகள்.
1. 1000 கோழிகள் பராமரிப்புக்கு சொந்தமாக குறைந்த பட்சம் 2000 முதல் 2500 சதுர அடி கோழிக்கொட்டகை மற்றும் உபகரணங்கள் வைத்திருக்கும், கோழி வளர்ப்பில் அனுபவம் மற்றும் ஆர்வம் கொண்ட, அதே கிராமத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் பண்ணையாளராக இருக்கவேண்டும்.
2. விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கை மற்றும் மாற்றுத்திறனாளிககளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் தேர்வு செய்ய்யப்படுவர்.
4. 2012 முதல் 2017 வரையிலான கோழி அபிவிருத்தி திட்டம் மற்றும் 2018-19-ஆம் ஆண்டின் குறைந்த உள்ளீடு தொழிநுட்ப கோழி வளர்ப்பு திட்ட பயனாளிகளாக இருக்கக்கூடாது.
5. 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்கவேண்டும்.
மேற்கண்ட தகுதிகள் இருப்பின் விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பத்தினை அருகில் உள்ள கால்நடை மருந்தாக கால்நடை உதவி மருத்துவரிடம் 30.06.2021-க்குள் வழங்க வேண்டும், மேலும் விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம் , கால்நடை பராமரிப்புத்துறை தருமபுரி அல்லது உதவி இயக்குனர் அலுவலகங்கள் தருமபுரி மற்றும் அரூர் ஆகியவற்றை அணுகி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ச. திவ்யதர்ஷினி இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.