கடத்தூர் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவன் கைது.

செய்தியாளர் : திலீபன்.
கடத்தூர் அருகே மனைவியை கத்தியால் குத்திக் கிழித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிபட்டியை சேர்ந்தவர் பரசுராமன் இவரது மனைவி ஸ்ரீதேவி. 42. இருவரும் கூலி தொழிலாளிகள். இதில் பரசுராமன் குடிப்பழக்கம் உள்ளவர், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். இதேபோன்று நாள்தோறும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு மனைவியை அடித்து துன்புறுத்தி அருகில் இருந்த கத்தியை எடுத்து கையில் குத்தி கிழித்ததில் கையில் ரத்தம் சொட்ட அலறியடித்து ஸ்ரீதேவி துடித்தார்.இதனையடுத்து உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அவர் கொடுத்த புகாரின் படி கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரசுராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form