குழந்தையை திருடிய இண்டூரைச் சேர்ந்த கணவன், மனைவி.



தருமபுரி  மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்மணி  இவரது மனைவி மாலினி வயது 19.  நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த 18ஆம் தேதி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  பிரசவத்திற்காக சேர்த்தனர். 

மாலினிக்கு நேற்று 19ஆம் தேதி  ஆண் குழந்தை பிறந்தது. மாலினி இயற்கை உபாதை கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றுள்ளார். உறவினர்கள் இல்லாத நிலை பார்த்து பிறந்த ஆண் குழந்தையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர் .குழந்தை இல்லாததை அலறியடித்த மாலினி மற்றும் பெற்றோர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள காவல்கட்டுபாட்டு அறையில் புகார் தெரிவித்தனர், பின் தருமபுரி நகர போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர், மேலும் CCTV காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு 4 பேரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில் தருமபுரி அருகே இண்டூரைச் சேர்ந்த கணவன், மனைவி ஆகியோர் குழந்தையை திருடியது விசாரணையில் அம்பலமானது.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form