ஆடி 1 தேங்காய் சுட்டு பொதுமக்கள் கொண்டாட்டம்.


ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு வழிபடும் மாதமாகும் கருதப்படும். ஆடி முதல் நாள் தேங்காய் சூட்டுவது வழக்கம். அதைக் கொண்டாடும் வகையில் தர்மபுரி மாவட்டம் அரூர் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட தில்லை நகரில் ஆடி முதல் தேதியில் குடும்பத்துடன் தேங்காயை சுத்தப்படுத்தி அதில் துளையிட்டு உள்ளே இருக்கும் தண்ணீர் எடுத்து பின்னர் தேங்காய்த் தண்ணீருடன் எள், அவல், வெள்ளம் கல்லை உள்ளிட்ட பொருட்களை இனைத்து தேங்காயின் உள் செலுத்தி பின்னர் நீண்ட அழிஞ்சி குச்சியில் அந்த ஓட்டையை அடைத்து. அந்த தேங்காய்க்கு மஞ்சள் பூசி, குங்குமமிட்டு சாமியை வணங்கிய பின் தீ மூட்டி சுட்டு, அதன் பின்னர் சுட்ட தேங்காயை  மீண்டும் அம்மனுக்கு படைத்து குடும்பத்துடன் தேங்காயை பங்கிட்டு சாப்பிட்டு மகிழ்ந்தனர். 

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form