தருமபுரி மாவட்டத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் தகவல் நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாகவும் சமரச முறையிலும் தீர்த்து வைப்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் மாண்பமை தேசிய சட்டப்பணிகள் ஆணையக்குழுவின் உதரவின்படியும் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மாண்பமை தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும் இன்று 10.07.2021 ஆம் தேதி தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதுபோன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம், மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட நான்கு தாலுகா நீதிமன்ற வளாகத்திலும் நடைபெற்றது.
இதில் நீதிமன்ற நிலுவையில் உள்ள 2779 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு, அதில் 1310 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டு அதற்கான சமரச தொகை ரூபாய் 1,35,66,480/- க்கு சமரசம் பேசி முடிக்கப்பட்டது. மேலும் வங்கி வாராக்கடன் 94 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு இதில் 2 வழக்குகள் பேசி தீர்க்கப்பட்டு மொத்தம் ரூபாய் 2,55,000/- க்கு முடிக்கப்பட்டது என முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவருமான திரு.மு.குணசேகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tags:
தருமபுரி