கோயிலுக்கு சென்று திரும்பிய தம்பதியினர் சாலை விபத்தில் உயிரிழப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பெரியார் நகரில் வசிப்பவர் முரளி 40 வயது இவர் மனைவி ராணி அம்மாள் 35வயது இருவரும் இன்று காலை சாமல்பள்ளம் முனியப்பன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஓசூர் நோக்கி தங்களது இருசக்கர வாகனத்தில் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓசூரை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர் கோபசந்திரம் தட்சன திருப்பதி அருகே வரும்போது  இவர்கள் இருசக்கர வாகனம் மீது கார் வேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட நிலையில் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் அக்கம்பக்கத்தினர் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளகிரி போலீசார் இருவர் உடலை மீட்டு உடல்கூறு ஆய்விற்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form