தருமபுரி எஸ்.வி. ரோடு பகுதியில் பல்வேறு வகையான பொருட்களை விற்கும் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஜன்னலை உடைத்து நேற்று அதிகாலை உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர்.
நேற்று காலை சூப்பர் மார்க்கெட்டை ஊழியர்கள் திறந்தபோது இந்த கொள்ளை சம்பவம் குறித்து அவர்களுக்கு தெரியவந்தது. இது தொடர்பாக சூப்பர் மார்க்கெட்டின் நிர்வாகி நரசிம்மன் தருமபுரி நகர காவல்துறையில் புகார் அளித்தார்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், கொள்ளை நடைபெற்ற பகுதியில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளையும் பார்வையிட்டனர்.
தருமபுரி நகரில் மேற்று ஒரே நாளில் கோவில் மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் 2 கிலோ எடை கொண்ட வெள்ளி நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags
தருமபுரி
