சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை.




கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி எச்சரித்துள்ளார்.


கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் லாட்டரி, சூதாட்டம், மணல் திருட்டு, கஞ்சா மற்றும் கள்ள சாராய விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் (8-ந் தேதி) தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ரூ.7 ஆயிரத்து 740 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 


மேலும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற 18 பேர் மீது தமிழ்நாடு லாட்டரி சீட்டுகள் தடை சட்டத்தின் கீழ், ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form