கிராம சபை கூட்டம் நடத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தருமபுரி மாவட்ட நமது கிராம சபை இயக்கம் சார்பில் மாநில தலைவர் விநாயகமூர்த்தி வழிகாட்டுதலின்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து  ஊராட்சி மன்றத்தலைவர்களையும் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கிராமசபை கூட்டத்தை நடத்தக்கோரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிளை பொறுப்பாளர்களும் அவர்கள் சார்ந்த ஊராட்சிகள் தலைவர்களிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கொரோனா பரவல் காரணம் காட்டி, தமிழகத்தில் கிராமசபை கூட்டம் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக நடத்தப்படவில்லை. இது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. இந்திய அரசியலைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊராட்சிகளின் உரிமைகளை உறுதிப்படுத்தும் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், சட்டப்படியாக முறையாக அறிவிப்பு கொடுத்து, வரும் ஆகஸ்ட் 15ம்தேதி சுதந்திரதினவிழா அன்று கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு மனு கூறியுள்ளார்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form