80அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் விழுந்த எருமை கன்று உயிருடன் மீட்பு.

அரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்திற்கு நேற்று 27/08/2021 புதன் கிழமை மாலை சின்னாங் குப்பம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி ராஜா கவுண்டர் த/பெ செங்கோடகவுண்டர்இவரது சுமார் 80அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் எருமை கன்று ஒன்று விழுந்து விட்டதாகவும் மீட்பு பணிக்கு வருமாறு தகவல் கிடைத்ததின் பேரில் அரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலர் மா. பழனிசாமி அவர்கள் தலைமையில் நீர்த்தாங்கி வண்டியில் குழுவினருடன்  விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி  எவ்வித காயமும்   இன்றிஎருமைகன்று 1 உயிருடன் மீட்கப்பட்டது  உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form